வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகும் 'டயங்கரம்- தனுஷ் வாழ்த்து

11 hours ago 4

சென்னை,

பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் என்று சமீப காலமாக பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகும் அறிவிப்பு வீடியோ பதிவினை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கிறார். மேலும் சினிமா உலகத்திற்கு வரவேற்பதாக வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தினை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார் வி.ஜே.சித்து. இந்தப்படத்திற்கு 'டயங்கரம்' எனப் பெயரிட்டுள்ளனர். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. டயங்கரம் படத்தில் வி.ஜே.சித்து உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Read Entire Article