கோவா: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

12 hours ago 4

கோவா,

கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லைராய் தேவி கோவிலில் ஆண்டுதோறும் ஜாத்ரா எனப்படும் பிரசித்தி பெற்ற திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. இதையடுத்து பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த நிலையில் பக்தர்கள் சரிவான பாதையில் சென்றபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கோவா மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article