வி.சி.க. மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம்; திருமாவளவன் தலைமையில் நாளை நடக்கிறது

2 hours ago 2

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்சி தொண்டர்களுக்கு நேற்று பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார்.

அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் 22ம் தேதி (நாளை) நடைபெறும் என அறிவித்தார். கலந்தாய்வு கூட்டத்தில் காலை அமர்வில் கட்சியின் மாவட்ட செயலாளர்களும், மதிய அமர்வில் கட்சியின் மேலிட பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். திருமாவளவன் தலைமையிலேயே இக்கூட்டம் நடைபெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள் தி.மு.க.வை மட்டுமே நம்பி இல்லை என்று பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article