வாழ்த்து தெரிவித்த விராட் கோலி.. நன்றி சொன்ன ஜோகோவிச்

6 hours ago 2

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 4-வது ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனும், 6-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா சந்தித்தார். முதல் செட்டை எளிதில் இழந்த ஜோகோவிச் அதன் பிறகு சுதாரித்து கொண்டு மீண்டார். அடுத்த 3 செட்டுகளை வரிசையாக கைப்பற்றி எதிராளியின் சவாலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 3 மணி 19 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 1-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வெளியேற்றி 16-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச்சின் ஆட்டத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா நேரில் கண்டு களித்தனர்.

இதனையடுத்து ஜோகோவிச் வெற்றி பெற்றதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விராட் கோலி பதிவிட்ட புகைப்படத்தை ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'உங்கள் ஆதரவுக்கு நன்றி' என்ற தலைப்புடன் பதிவிட்டார். 

Read Entire Article