
பாட்னா,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறை மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகிய வற்றை கண்டித்து பீகாரில் எதிர்க்கட்சிகள் நாளை முழு அடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்துள்ளன. பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இந்த போராட்டத்தில் இணைந்து கொள்கிறார்.
இதை ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா, தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் தெரிவித்தனர். முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழில் அதிபரின் வீட்டுக்கும் செல்ல இருக்கிறார்.