வாழ்க்கைப் பாதையில் தடைகளா..?

2 months ago 13

"வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும்" என்று பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். சிலர் இந்த மேடு பள்ளங்களை கடந்து வெற்றிக்கோட்டை எட்டுகின்றனர். சிலர் கடக்க முடியாமல், கிடைத்ததை வைத்து ஆறுதல் அடைகின்றனர். இன்னும் சிலர் விரக்தியில் முயற்சிகளை கைவிடுவதும் உண்டு.

எனவே, நமக்கு முன் இவ்வளவு தடைகளா? என்று கலங்கி நின்றால், வாழ்க்கை நமக்கு எப்போதும் கசப்பானதாகவே இருக்கும். ஆனால் "எத்தனை தடைகள் வந்தாலும் அவை என்னை ஒன்றும் செய்யாது.. என் முன் நிற்கும் தடைக் கற்களை உடைத்து என் வாழ்வின் வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றிக் கொள்வேன்" என்ற மன உறுதியை வளர்த்துக் கொண்டால், தடைகளை கடந்து, துன்பங்களை சமாளிக்கும் பக்குவம் பெற்றவர்கள் ஆவோம்.

ஒரு எறும்பு தன்னை விட மூன்று மடங்கு நீளமான ஒரு புல்லை தூக்கிக்கொண்டு சென்றது. அது போகும் பாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. புல்லை இழுத்துக்கொணடு அந்த எறும்பால் தண்ணீரை கடந்து செல்ல முடியாத நிலை. ஆனால் அந்த எறும்பு, தான் தூக்கிக்கொண்டு வந்த புல்லை பின்புறமாக இருந்து தண்ணீர் மீது தள்ளியது. இப்போது அந்த புல், தண்ணீர் மீது ஒரு பாலம் போல அமைந்தது. பின்னர் எறும்பு அந்தப் புல் மீது சென்று தண்ணீரை கடந்தது. மறுபுறம் சென்றதும் மீண்டும் புல்லை இழுத்துக்கொண்டு சென்றது.

சாதாரண எறும்பால் தனது பாதையில் உள்ள தடையை சமாளிக்க முடிகிறது என்றால், மனிதர்களாலும் முடியும். துன்பங்கள் என்பது மனித வாழ்வில் சில நேரங்களில் சந்திக்கக் கூடியது. இப்படி நேர்ந்து விட்டதே என்று துவண்டு போகாமல், இந்த கதையில் சொல்லப்பட்ட எறும்புபோன்று அதை சமாளிக்கும் சமயோசித புத்தியையும் மன தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

முடியாத காரியம் என்று ஒதுங்கிவிடாமல், தன்னம்பிக்கையோடு நிதானமாக யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். 

Read Entire Article