இதனால்தான் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை - அஸ்வின்

1 day ago 1

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம் பெறாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் இந்திய அணிக்காக கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு நன்றாக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் தொடக்க வீரர் இடத்திற்கு ஏற்கனவே ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் இடையே கடும் போட்டி இருப்பதாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இதற்கிடையே சஞ்சு சாம்சன் திடீரென அடுத்தடுத்த சதங்களை அடித்து ஓப்பனிங் இடத்தை பிடித்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். அதனாலேயே ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இந்திய அணியின் டாப் ஆர்டர் நெருக்கமாக இருக்கிறது. அங்கே ஜெய்ஸ்வால், கில், ருதுராஜ் ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாள் அல்லது ஏதேனும் ஒரு பார்மட்டில் விளையாடுவதற்கான திட்டத்தில் இருக்கிறார்கள். தன்னுடைய கடைசி டி20 போட்டியில் ருதுராஜ் சதம் அடித்து அசத்தினார். ஆனால் அப்போதிலிருந்து அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே அந்த இடத்திற்கு 2 பேர் போட்டியிடுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சஞ்சு சாம்சன் 2 சதங்கள் அடித்து ஒரு இடத்தை எடுத்துக்கொண்டார். மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் பெரிய ரன்கள் குவித்து தற்போது ஓப்பனிங் இடத்தை பிடித்துள்ளார். அபிஷேக் ஷர்மா சுமாராக விளையாடியதால் அழுத்தம் உண்டாகி வந்தது. அவரும் தற்போது ருதுராஜ் வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்று தெரிந்து அழுத்தத்தின் கீழ் அதிரடியாக விளையாடியுள்ளார். கவலையின்றி சுதந்திரமாக விளையாடுங்கள் என்ற மெசேஜை அவர் இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுள்ளார்" என்று கூறினார்.

Read Entire Article