
ஒகேனக்கல்,
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வர்.
இதனிடையே தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இன்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சிலர் தொங்கு பாலத்தில் நின்றும் காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர்.