ரோகித்துக்கு இடமில்லை... ஆல் டைம் ஐ.பி.எல் லெவனை தேர்வு செய்த கில்கிறிஸ்ட், பொல்லாக்

2 hours ago 3

மும்பை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. மீதமுள்ள அணிகள் பிளே ஆப் சுற்றுக்குமுன்னேற கடுமையாக போராடி வருகின்றன.

இதனால் இந்த ஐ.பி.எல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் இருவரும் இணைந்து தங்களுடையை ஆல் டைம் ஐ.பி.எல் லெவனைத் தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

இந்த அணிக்கு சென்னைக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த தோனியை கேப்டனாக நியமித்துள்ளனர். அவரே விக்கெட் கீப்பராகவும் செயல்பட உள்ளார். ஆனால், அதேசமயம் இந்த அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் வழங்கவில்லை. மாறாக தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலியை இருவரும் தேர்வு செய்துள்ளனர்.

தொடர்ந்து மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களாக ஜடேஜா, சுனில் நரேன், பும்ரா, மலிங்ஜா, சாஹல் ஆகியோரை தேர்வு செய்துள்ளனர்.

கில்கிறிஸ்ட் மற்றும் பொல்லாக் தேர்வு செய்த ஆல் டைம் ஐ.பி.எல். லெவன் அணி விவரம்:

கிறிஸ் கெயில், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சுனில் நரேன், ஜஸ்ப்ரீத் பும்ரா, லசித் மலிங்கா, யுஸ்வேந்திர சாஹல்.

Read Entire Article