தாமதமாகும் மாளவிகா மோகனனின் அறிமுக படம்

3 hours ago 3

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பல மலையாள படங்களில் நடித்துள்ள இவர் தமிழில், மாஸ்டர், மாறன் மற்றும் தங்கலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் பாலிவுட்டில் அறிமுகமான இவர் கடந்த 2021-ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தனது முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது இவர் பிரபாசின் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டே இப்படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாமல் உள்ளது. திரையரங்க வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தாமதம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Read Entire Article