
இந்த வார ராசி பலன்
மேஷம்
முன் கோபம் இருந்தாலும், நல்ல குணமும் கொண்ட மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் பயணங்கள் மூலம் பல நன்மைகள் வந்து சேரும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வேறு வீடு மாற்றுவது, வீடு கட்டும் முயற்சிகள் ஆகியவை நல்ல விதமாக நடந்தேறும்.
எந்திரங்கள் தயாரிப்பு, ஓட்டல், ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்வோருக்கு நல்ல ஆதாயம் உண்டு. மளிகைக்கடை, விவசாய விளைபொருள் வியாபாரிகள் ஆகியோருக்கு புதிய தொடர்புகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் துறையினருக்கு புதிய பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசுத்துறை சார்ந்த பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் உறவினர் வீட்டு விசேஷங்களில் உற்சாகமாக கலந்து கொள்வார்கள்.
வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவத்தால் சீரடையும். மாலை நேரங்களில் மஞ்சள் வாழைப்பழம், அருகம்புல் ஆகியவற்றை பசு மாட்டுக்கு உண்ணக் கொடுப்பதன் மூலம் பல சிக்கல்கள் அகலும்.
ரிஷபம்
மனதில் நுட்பமான கலை உணர்வுகளும், மனிதர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கும் தன்மையும் கொண்ட ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். குடும்ப பொருளாதார நிலை நல்லவிதமாக இருக்கும்.
ஏற்றுமதி தொழில், எண்ணெய் வித்துக்கள், ஆடை ஆபரண பொருட்கள் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வாகனங்களில் சென்று தண்ணீர் கேன் போடுபவர்கள், கேட்டரிங், மருந்துக்கடை வர்த்தகர்கள் தொழில் விரிவாக்கம் செய்யலாம். வங்கிப் பணியாளர்கள், அரசு பணியாளர்கள் தங்கள் பணிகளில் கவனமாக செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் சில சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தந்து வர்த்தகத்தை பெருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசுத்துறை பங்குகள் மற்றும் மின் நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொழில் கல்வி கற்கும் சூழல் அமைந்துள்ளது.
தோலில் பாதிப்பு, மனக்குழப்பம் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவத்தால் அகலும். தினமும் மாலை நேரங்களில் கருப்பு நிற பசு மாட்டுக்கு செவ்வாழை அல்லது அருகம்புல் உண்பதற்கு கொடுத்தால் பல நன்மைகள் ஏற்படும்.
மிதுனம்
புத்தகங்கள் மீதும், வாசிப்பு மீதும் அதீத ஆர்வம் கொண்ட மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுற்றத்தார்களின் அன்பு, ஆதரவு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இல்லத் துணையோடு இனிமையாக பேசி மகிழ்வீர்கள்.
வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள், வங்கித்தொழில் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் நல்ல வளர்ச்சி பெறுவார்கள். கமிசன் ஏஜென்சி, பெட்டிக்கடை, வட்டி தொழில் செய்பவர்கள் தொழில் விருத்தி அடைவர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணி மாற்றம் கிடைக்கப் பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் சற்று முயற்சி செய்தால் பெரிய அளவில் வர்த்தகம் செய்ய முடியும். ஷேர் மார்க்கெட் துறையினர் பெரு நிறுவன பங்குகள் மற்றும் வங்கி பங்குகள் மூலம் நல்ல லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி மட்டுல்லாமல் விளையாட்டிலும் திறமை காட்டுவார்கள்.
பித்தம் சம்பந்தமான தலை சுற்றல், தொண்டைப்புண் ஆகியவை ஏற்பட்டு நீங்கும். இயன்றவரை தினமும் மாலை நேரங்களில் அருகில் உள்ள கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவதன் மூலம் பல சிக்கல்கள் விலகும்.
கடகம்
பல திறமைகளை கொண்டவர்களாக இருந்தாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ள விரும்பாத அமைதியான கடகம் ராசியினருக்கு இது மகிழ்ச்சிகரமான காலகட்டம். குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் நடந்தேறும். இல்லத் துணையின் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கட்டுமான துறை, லேத் பட்டறை, இரும்பு பொருள் உற்பத்தி ஆகிய தொழில் பிரிவினர் சில சிரமங்களை சந்தித்தாலும் விரைவில் அவை விலகிவிடும். ரசாயன பொருள்கள், கட்டிட பொருள் விற்பனை ஆகிய வியாபாரிகள் நல்ல வளர்ச்சி பெறுவார்கள். அரசு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உயர் அதிகாரியின் ஆதரவை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய முயற்சிகளை தள்ளி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் உரம் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது.
கை கால் அசதி, மன அழுத்தம், நாக்கில் புண் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும். சிவன் கோவிலில் உள்ள இரட்டைப் பாம்பு சிலைக்கு காலை நேரத்தில் பால் அபிஷேகம் செய்வது மற்றும் திருநங்கைகளுக்கு பொருள் உதவி செய்வது ஆகியவற்றின் மூலம் நன்மைகள் வந்து சேரும்.
சிம்மம்
பசி என்று வந்து தங்களிடம் தானம் கேட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்யும் நல்ல குணம் படைத்த சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த தனவரவு வந்து சேரும். இல்ல துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். குடும்ப உறவுகளிடம் வாத, விவாதங்களை தவிர்ப்பது அவசியம்.
பணம் கொடுக்கல்-வாங்கல், திரவப் பொருட்கள் விற்பனை ஆகிய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் ஆதாயம் உண்டு. பாத்திர வியாபாரம், ஆபரண பொருட்கள், கால்நடை விற்பனை ஆகிய வியாபாரிகளுக்கு லாபகரமான காலகட்டம். அரசுத் துறை ஊழியர்கள் தங்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
ரியல் எஸ்டேட் துறையினர் நீண்ட காலம் விற்காமல் இருந்த கட்டிடங்களை விற்பனை செய்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வங்கிகள் மற்றும் உயர்தர ஓட்டல் நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப தொழில் கல்வி அல்லது பொறியியல் கல்வி சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவார்கள்.
வெயிலில் அலைவதால் நாக்கு வறட்சி, தோலில் பாதிப்பு மனக்குழப்பம் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். கோவில் வாசலில் அமர்ந்துள்ள யாசகர்களுக்கு அன்னதானம் மற்றும் பொருள்தானும் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
கன்னி
மற்றவர்களை ஒப்பிடும் பொழுது புத்திசாலிகளாக செயல்படும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் பல்வேறு பெரிய மனிதர்களுடைய தொடர்பு மூலம் பல நன்மைகள் உண்டு. குடும்பத்தில் உறவினர்கள் வருகை, சுப காரிய பேச்சு, சுபச் செலவுகள் ஆகியவை உண்டு. எதிர்பாராத தன வரவும் உண்டு.
உற்பத்தி மற்றும் விற்பனை துறை சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் அனைவருக்குமே இது ஒரு நல்ல காலகட்டம். பங்குதாரர்கள் மூலம் வியாபாரத்தை செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் இணைத்துக் கொள்ளும் காலகட்டம் இது. தனியார் துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வு உண்டு.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய அடுக்குமாடி கட்டுமான திட்டங்களை தொடங்குவதற்கான காலம் கனிந்துள்ளது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் பொறியியல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சார்ந்த பங்குகள் மூலம் லாபம் பெறுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுக்களில் சாதனை புரிவர்.
உடலில் பித்தம் அதிகரித்து தலைசுற்றல், பல் மற்றும் ஈறு பாதிப்பு, சனி தொல்லை ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் நீங்கும். மாலை நேரங்களில் அருகில் உள்ள அம்பிகை அல்லது தாயார் சன்னதியில் வெள்ளை நிற மலர்களை சமர்ப்பணம் செய்து வழிபட்டு வந்தால் பல பிரச்சினைகள் நீங்கும்.
துலாம்
இறைவனை வாயார பாடி பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்ட துலாம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் நன்மைகள் ஏற்படும். இல்லத்தரசிகள் நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று திட்டமிட்ட பொருட்களை வாங்கி மகிழ்வர். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டமும் ஏற்படும்.
விவசாயம், ஓட்டல், திரவப் பொருள் விற்பனை ஆகிய தொழில் துறையினருக்கு இது லாபகரமான காலகட்டம். ஜவுளி விற்பனை, வாகனங்கள் விற்பனை ஆகிய துறை வியாபாரிகளுக்கு தொழில் விருத்தி உண்டு. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வெளிநாட்டு பணி வாய்ப்புகள் ஏற்படும்.
ரியல் எஸ்டேட் துறையினர் நீண்ட காலமாக விற்காமல் இருந்த குடியிருப்புகளை சலுகை விலை அறிவித்து விற்கும் காலகட்டம் இது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் கனிம நிறுவனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவார்கள்.
சரியான நேரத்திற்கு உணவு உண்ணாததால் தலைசுற்றல், தலைபாரம், நுரையீரல் அலர்ஜி ஆகியவை ஏற்பட்டு வைத்தியம் மூலம் சரியாகும். வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு துளசி மாலை சமர்ப்பணம் செய்வதன் மூலம் அல்லது நாய்களுக்கு இரவில் உணவளிப்பதன் மூலம் பல சிக்கல்கள் அகலும்.
விருச்சிகம்
பகலை விட இரவில் கணவிழித்து பணி புரிவதில் விருப்பம் கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் தெய்வ அனுக்கிரகம் கிட்டும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகி புதிய மனிதர்களாக உலா வருவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
பால் பண்ணை, நெய், பழ வர்க்கங்கள் ஆகிய உற்பத்தியில் ஈடுபடும் தொழில் துறையினர் நல்ல ஆதாயம் பெறுவார்கள். உப்பு வியாபாரம், காளான் மற்றும்
காய்கறிகள் விற்பனையாளர்கள் புதிய கிளையை திறப்பதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்கள் தங்களுடைய அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய சிக்கல்களை சந்தித்து அவற்றிலிருந்து சமாளித்து வெளிவர வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய விற்பனை நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் தொடர்பான பங்குகளில் லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது.
அலைச்சல் காரணமாக உடல் அசதி, காதில் கோளாறு, தலை சுற்றல் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும். மாலை நேரங்களில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு மல்லிகை பூ அல்லது வெண் தாமரை மலர்களை சமர்ப்பணம் செய்து இறையருள் பெறலாம்.
தனுசு
கற்றலில் ஆர்வம் கொள்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு கற்பிப்பதிலும் நல்ல திறன் கொண்ட தனுசு ராசியினருக்கு இந்த வாரம் பல்வேறு நல்ல மாற்றங்கள் உண்டு. வீடு மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்த இல்லத்தரசிகளுக்கு அதற்கான வாய்ப்பு வந்துவிட்டது. ஒரு சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு.
பிரிண்டிங் பிரஸ், புத்தகம் விற்பனை, ஆடம்பரப் பொருள் தயாரிப்பு ஆகிய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இது லாபகரமான காலகட்டம். கமிஷன் ஏஜென்சி, இசைக்கலைஞர்கள், சமையல் கலை நிபுணர்கள் ஆகியோர் வர்த்தக மேன்மை அடைவார்கள். தனியார் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.
ரியல் எஸ்டேட் துறையினர் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உடைய தொடர்பு பெற்று வர்த்தக வளர்ச்சி பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி மற்றும் கட்டுமானத்துறை நிறுவனங்கள் பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டில் மேற்படிப்பு படிப்பதற்கான தகவல்களை பெறுவார்கள்.
உடலில் ஆங்காங்கே கட்டிகள் ஏற்படுவது, சிறுநீர் கோளாறு, வாயுத்தொல்லை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு வைத்தியத்தால் குணமடையும். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு மாலை நேரங்களில் செந்தாமரை வாங்கி கொடுப்பதன் மூலமும், சிவலிங்கத்துக்கு சந்தன அபிஷேகம் செய்வதன் மூலமும் பல நன்மைகள் வந்து சேரும்.
மகரம்
பெற்ற அன்னைக்கு செல்ல குழந்தையாகவும், நண்பர்களுக்கு நல்ல நண்பர்களாகவும் உள்ள மகரம் ராசியினருக்கு இந்த வாரம் பல அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். இல்லத் துணையோடு பல சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். கைகளில் பணப்புழக்கம் உண்டு.
என்ஜினியரிங், இரும்பு பொருள் தயாரிப்பு, கட்டிடப் பொருள் உற்பத்தி ஆகிய தொழில்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். சிமெண்ட், செங்கல், இரும்பு கம்பிகள் விற்பனை செய்பவர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அரசு துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பணியிட மாற்றம் பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான பணிகளை தொடங்கி நடத்துவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வங்கிகள், மசாலா தயாரிப்பு பொருள் நிறுவனங்கள் ஆகிய பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது.
குதிகால் வலி, தோலில் தடிப்பு, சளி தொல்லை ஆகிய சிக்கல்கள் ஏற்பட்டு மருத்துவத்தால் அகலும். பசு மாடுகளுக்கு பசுமையான காய்கறிகளை தீனியாக கொடுப்பதன் மூலமும், மகாலட்சுமி தாயாருக்கு பச்சை ஆடைகளை சமர்ப்பணம் செய்வதன் மூலமும் பல நன்மைகள் ஏற்படும்.
கும்பம்
மனதில் ஏற்பட்ட கவலைகளை மறப்பதற்கு கூடுதலாக பணியில் ஈடுபடும் மனப்பான்மை கொண்ட கும்பம் ராசினருக்கு இந்த வாரம் செலவுகள் கூடுதலாக இருக்கும். அதற்கேற்ற பொருளாதார வரவும் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விவசாயம், பால் உற்பத்தி, மளிகை கடை ஆகிய தொழில் பிரிவினர் உழைப்பிற்கு ஏற்ற ஆதாயத்தை பெறுவார்கள். கட்டுமான பொருள்கள் விற்பனை, பர்னிச்சர்கள், காய்கறி விற்பனை செய்பவர்கள், கடன் கொடுக்கல்-வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு, மதிப்பு அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் துறையினர் தெற்கு பார்த்த மனை அல்லது வீடுகள் மூலம் லாபம் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்வர்.
காதுகளில் கோளாறு, சரும பாதிப்பு, தலை சுற்றல் போன்ற கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும். வெள்ளை நிற பசு மாடுகளுக்கு செவ்வாழை அல்லது மஞ்சள் வாழை உண்பதற்கு கொடுப்பதன் மூலமும், பெருமாள் கோவிலுக்கு பச்சை வஸ்திரம் சமர்ப்பணம் செய்வதன் மூலமும் நன்மைகள் பெருகும்.
மீனம்
மனதில் திட்டமிடுவது ஒரு வகையாகவும், அதை செயல்படுத்தும் போது இன்னொரு விதமாகவும் நடந்து கொள்ளும் மீனம் ராசியினர் இந்த வாரம் பல சுப காரியங்களில் குடும்பத்தோடு பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். செலவினங்கள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவும் உண்டு.
தங்க நகை உற்பத்தி, சீட்டு நிறுவனம் நடத்துதல், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு ஆகிய தொழில்துறையினர் தொழில் வளர்ச்சி பெறுவார்கள். ஹோட்டல், லாட்ஜ், ஹோட்டல் ஆகிய வர்த்தக பிரிவினர் வாடிக்கையாளர்கள் அது ஆதரவால் மகிழ்ச்சி அடைவார்கள். அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
ரியல் எஸ்டேட் துறையினர் தொடங்கி நடத்தி வரும் கட்டுமான திட்டங்களில் புதிய வாடிக்கையாளர்கள் வீடுகளை வாங்குவார்கள். ஷேர் மார்க்கெட் விரைவினர் பால் பண்ணை பொருள்கள் மற்றும் எண்ணெய் தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்தை மனதில் கொண்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
பல் ஈறுகளில் கோளாறு, நுரையீரல் பாதிப்பு, தலைவலி ஆகிய பிரச்சினைகள் ஏற்பட்டு வைத்தியமூலம் நீங்கும். அருகிலுள்ள காளி அல்லது துர்க்கை கோவிலில் செவ்வாழைப்பழம் நிவேத்யம் செய்வதும், புறாக்கள் அல்லது காகங்களுக்கு காலை நேரத்தில் தானியங்கள் உணவாக அளிப்பதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.
