
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
குழந்தை போன்று பாசமாக பழகும் தன்மை உடைய மேஷம் ராசியினர் இந்த வாரம் அமைதியாகவும், மௌனமாகவும் இருந்து காரிய வெற்றி பெற வேண்டும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் நன்றாக திட்டமிட்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யலாம். அரசு மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் மருத்துவ செலவுகளை கடன் பெற்று சமாளிப்பர்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டு விசேஷங்களில் உற்சாகமாக இருப்பார்கள்.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மருந்துகளை வேளாவேளைக்கு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். நண்பர்கள், உடன் பிறந்தவர்களுக்கு பரிசுகள், புத்தாடைகளை பரிசளிப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
ரிஷபம்
கடின உழைப்பும், படைப்புத் திறனும், கொண்ட ரிஷபம் ராசியினருக்கு குரு, சூரியன் சேர்க்கை காரணமாக இந்த வாரம் சமூக அந்தஸ்தும், மதிப்பும் அதிகரிக்கும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ளலாம். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணி உயர்வை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது.
தலைசுற்றல், மயக்கம் ஆகியவை ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றுக்கு பால் அபிஷேகம் செய்து சிவப்பு நிற பூமாலை சூட்டி பிராத்தனை செய்தால் நல்லது நடக்கும்.
மிதுனம்
மகிழ்ச்சியில் துள்ளலாகவும், துன்பத்தில் சோகமாகவும் காட்சியளிக்கும் மிதுனம் ராசியினர் இந்த வாரம் சனி, செவ்வாய் ஆகியவற்றின் சஞ்சாரத்தால் முயற்சிகளில் வெற்றி பெறுவர்.
தொழில்துறையினர், வியாபாரிகள் தடை தாமதங்களை சந்தித்தாலும் ஆதயத்தை அடைவர். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று செயல்படுவார்கள்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு அரசாங்க வழிகளில் ஆதாயம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர்.
கைகால் வலி, உடல் அசதி ஏற்பட்டு மருத்துவத்தால் சரியாகும். ஆதரவற்ற அனாதை குழந்தைகள், இளம் பெண்களுக்கு பொருளுதவி, பண உதவி செய்வது நன்மைகளை தரும்.
கடகம்
பிடிக்காதவர்களை பிடிக்கவில்லை என்று நேருக்கு நேர் சொல்லும் இயல்பு கொண்ட கடகம் ராசியினருக்கு இந்த வாரம் லாப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் மனதில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்துவார்.
தொழில்துறையினர், வியாபாரிகள் சிறப்பாக செயல்பட்டு சமூக மதிப்பை பெறுவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று சுறுசுறுப்பாக செயல்படுவர்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள்.
மன உளைச்சல், உழைப்பு காரணமாக அசதி ஏற்பட்டு ஓய்வு எடுப்பதால் சரியாகும். புற்று கோவில் பூஜைக்கு தேவையான பால், வெள்ளை நிற மலர்கள் வழங்குவதால் நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்
நேர்மறை எண்ணங்களோடு துணிச்சலாக செயல்படும் சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் சுக்கிரன், குரு ஆகிய கிரக சஞ்சாரத்தால் மனதில் புதிய நம்பிக்கைகள் ஏற்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் கடந்த காலங்களில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகி லாபம் அடைவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு நல்ல பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் புதிய முதலீடுகளை திட்டமிட்டு மேற்கொள்ளலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். தூய்மைப் பணியாளர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் அளிப்பதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.
கன்னி
திறந்த மனமும், வேடிக்கையாக செயல்படும் இயல்பும் உள்ள கன்னி ராசியினருக்கு இவ்வாரம் சுக்கிரன், புதன் கிரக சஞ்சாரத்தால் காரிய வெற்றி உண்டு.
தொழில் துறையினர், வியாபாரிகள் பொருட்கள் கொள்முதல் செய்யும்போது வழக்கத்தை விட குறைவாக செய்வது நல்லது. அரசு உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு ஏற்ற சூழலில் பணியாற்றலாம்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் முதலீடுகளில் நல்ல லாபத்தை அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களது ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதால் உடலில் அசதி ஏற்பட்டு ஓய்வு எடுப்பதன் மூலம் விலகும். கோவில் குளங்களில் உள்ள மீன்களுக்கு பொரி போடுவது, வெண்மை நிற பசுக்களுக்கு அருகம்புல் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் நன்மை ஏற்படும்.
துலாம்
மனதில் உள்ள எண்ணத்தை வெளிக்காட்டாத சுபாவம் கொண்ட துலாம் ராசியினருக்கு இந்த வாரம், சனி, குரு ஆகிய கிரகங்களில் அமைப்பால் மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும்.
தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலகட்டம். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் கவனிப்பது நல்லது.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் தகவல் தொழில்நுட்பத்தால் தொழில் விருத்தி அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி, பணி குறித்த எண்ணங்கள் உருவாகும்.
ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். முதியோர் இல்லங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை இயன்ற அளவு வாங்கித் தருவதால் நன்மை ஏற்படும்.
விருச்சிகம்
லட்சியத்துடன், கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறும் விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரக அமைப்புகளால் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்.
தொழில் துறையினர், வியாபாரிகள் முதலீடு செய்வதில் திட்டமிட்டு, கவனமாக செயல்ட்டு வெற்றி பெறலாம். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து காரிய வெற்றி பெற வேண்டும்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான வெற்றி பெறுவர்.
அடிவயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் அகலும். உடல் உழைப்பு தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம், பொருள்தானம் செய்தால் நன்மை ஏற்படும்.
தனுசு
வேடிக்கையும், தன்னிச்சையான மனநிலையும் கொண்ட தனுசு ராசியினர் குரு, ராகு ஆகிய கிரகங்களின் அமைப்பால் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி அடைவர்.
தொழில்துறையினர், வியாபாரிகள் புது இடங்களில் கிளைகளை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தனியார் உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் புதிய பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவர்.
காய்ச்சல், கை கால் வலி ஏற்பட்டு தக்க சிகிச்சை மூலம் குணமடையும். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஏழை, எளியோருக்கு மருந்துகள் வாங்கித் தருவது நன்மை தரும்.
மகரம்
மற்றவர் வெற்றியில் மனம் மகிழும் வெள்ளை இதயம் கொண்ட மகரம் ராசியினருக்கு, சனி, சுக்கிரன் ஆகிய கிரக அமைப்பால் இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை எதிர்கொள்வர்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் திட்டமிட்டு முதலீடு செய்தால் நல்ல லாபம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு சுற்றுலா செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அடிவயிற்றில், மார்பில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். வீட்டுக்கு அருகிலுள்ள கோவிலுக்கு பால், மலர் மாலை வாங்கி தருவதால் மனதில் நினைத்தது நடக்கும்.
கும்பம்
நட்பையும், உறவையும் ஒரு சேர சமாளித்து வாழ்க்கை நடத்தும் கும்பம் ராசியினருக்கு குரு, சுக்கிர சஞ்சாரத்தால் இந்த வாரம் சுப காரியங்கள் எண்ணியபடி நடந்தேறும்.
தொழில் துறையினர், வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு மகிழ்ச்சியாக வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம்.
வெளியிடங்களில் சுகாதாரமற்ற நிலையில் எந்தவித பானங்களையும் பருக வேண்டாம். கன்றுடன் கூடிய பசு மாட்டுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுப்பதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.
மீனம்
பலரிடம் ஆலோசனை கேட்டாலும், தன் மனம் போல செயல்படும் இயல்பு கொண்ட மீனம் ராசியினருக்கு இந்த வாரம் செவ்வாய், கேது கிரக அமைப்பால் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் கடந்த கால அனுபவ அடிப்படையில் நடப்பு சிக்கல்களை தீர்ப்பார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவர்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் அளவாக முதலீடு செய்யலாம். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும்.
அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு ஓய்வெடுப்பதால் விலகும். ஆசிரியர்கள், குரு நிலையில் இருப்பவர்களுக்கு பரிசுகள், பழங்கள் ஆகியவற்றை வழங்கி நன்மை அடையலாம்.
