கிளப் உலகக்கோப்பை கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அரையிறுதிக்கு தகுதி

9 hours ago 1

நியூஜெர்சி,

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நியூஜெர்சியில் இந்திய நேரப்படி இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் - டார்ட்முன்ட் அணிகள் மோதின.

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதியதால் இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும் ரியல் மாட்ரிட் 3-2 என்ற கோல் கணக்கில் டார்ட்முன்ட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) 2-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதியில் பிஎஸ்ஜி - ரியல் மாட்ரிட் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. 

Read Entire Article