
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஜிம்மில் பயற்சியாளராக செயல்பட்டு வந்தவர் மனோஜ் குமார். அந்த ஜிம்மில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி சேர்ந்துள்ளார். அந்த ஜிம்மில் நேற்று உடற்பயிற்சி செய்துவந்த சிறுமிக்கு ஜிம் பயிற்சியாளர் மனோஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் பயிற்சியாள மனோஜ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.