![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35673985-gold4.webp)
சென்னை,
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது. கடந்த மாதம் (டிசம்பர்) 26, 27-ம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை ரூ.240 உயர்ந்து ரூ.60,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.60,440-க்கும், ஒரு கிராம் ரூ.7,555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.