சிவகிரி,பிப்.7: வாசுதேவநல்லூரில் பஸ் நிலையத்தை ₹1.08 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியை சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலைஞர் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சி பராமரிப்பு பணிகள் திட்டத்தின் கீழ் ₹1.08 கோடி மதிப்பில் வாசுதேவநல்லூர் பேருந்து நிலையமானது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை சதன் திருமலை குமார் எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, புளியங்குடி மதிமுக நகரச் செயலாளர் ஜாகீர் உசேன், விவசாய அணி மாவட்ட துணைச்செயலாளர் மாரிச்சாமி, இலக்கிய அணி சந்திரன், கருப்பையா, பேரூராட்சி உறுப்பினர் சக்தி கோமதிசங்கர், மாரியப்பன், சுமங்கலி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
The post வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்தை ₹1.08 கோடியில் புதுப்பிக்கும் பணி appeared first on Dinakaran.