வாக்குச்சாவடி அலுவலர்கள் வீட்டின் முன் பெயர்ப்பலகை வைக்க பார்வையாளர் அறிவுறுத்தல்

2 months ago 13
வாக்காளர்கள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது வீட்டின் முன் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்காளர் திருத்த பட்டியலுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். இறந்துபோன வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Read Entire Article