திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது: காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி

2 hours ago 1

சென்னை: திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது என சென்னையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத நல்லிணக்கத்தை கெடுக்க திருப்பரங்குன்றம் மக்களுக்கு எதிராக சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாத.ஜனநாயகம்தான் எங்கள் கோட்பாடு, அதனை சீர்குலைக்க நினைப்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும. பாஜக ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்று எல்லா குறுக்கு வழியும் கையாள்கிறார்கள். முருகனிடம் உங்கள் அரசியல் எடுபடாது.

அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள், அயோத்தியில் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் தனது கலகத்தை செய்ய ஆரம்பித்துள்ளனர்.வட மாநிலங்களில் மத அரசியல் தோல்வி அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது திருப்பரங்குன்றத்தில் கலவர பூமியாக மாற்றுவதற்கும், மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்கும் ஒரு கும்பல் வெளி மக்களை அழைத்து உள்ளூர் மக்களுக்கு எதிராக பிரச்னையை கையில் எடுத்துள்ளதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மதநல்லிணக்க வழிபாடு நடைபெறும். திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் சிக்கந்தரையும் நாளை வழிபட உள்ளோம். எனவும் தெரிவித்தார்.

The post திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது: காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article