வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

4 hours ago 1

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது குறித்து பேசிய அவர், "அரசாங்கம் வாக்காளர் பட்டியல்களை உருவாக்குவதில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாக்காளர் பட்டியல் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசுகையில், "வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் உள்ளதாக மராட்டிய மாநிலம் மற்றும் அரியானாவில் சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த ஆண்டு மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல்கள் முழுமையாக திருத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல்களில் தவறுகள் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தேர்தல் ஆணையம் நாட்டிற்கு பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Read Entire Article