தொண்டி, ஜன.26: தொண்டி மேற்கு அரசு துவக்கப்பள்ளியில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது. ஜன.25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் நடந்தது.
இதில் இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம். ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமும் இன்றி இனம், சாதி, மதம், சமுக தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதலின்றியும் வாக்களிப்போம் என்று உறுதியளிக்கிறோம் என ஆசிரியர்கள் மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
The post வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.