சென்னை: 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கியது ஆணையம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன்லைன் கேமிங் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது. பணம் கட்டி ஆடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
The post ஆன்லைனில் பணம் கட்டி விளையாட அரசு கட்டுப்பாடு விதிப்பு appeared first on Dinakaran.