காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர்கள் தேவநாதன் (48) ஜெயராமன் (45) நேற்று இரவு இரவு குமராட்சி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு காவல் பணியில்
ஈடுபட்டனர்.
அப்பொழுது தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்பொழுது பாண்டிச்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். மர்ம நபர் தனது கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை வைத்து காவலர்கள் கையில் கிழித்து விட்டு தப்பி சென்றுள்ளார்
இதனை அறிந்த காவல் நிலைய பொருப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் வாகனத்தை துரத்தி சென்றனர். அப்போது வழியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர் தப்பி செல்ல குதிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது கையில் முறிவு ஏற்பட்டது.
இதனை பார்த்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(45) என்பது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் கத்தி எப்படி வந்தது என்பது குறித்தும் பல்வேறு விசாரணை நடைபெற்று வருகிறது.
The post வாகன சோதனையில் போலீசாருக்கு கத்தி வெட்டு: தப்பி செல்லும் போது கை முறிவு ஏற்பட்டு குற்றவாளி கைது appeared first on Dinakaran.