சேந்தமங்கலம், மே 5: சேந்தமங்கலம் அருகே வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலத்தில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி செல்லும் புறவழிச் சாலையில் இரவு நேரங்களில் தனியாக டூவீலரில் செல்வோரை வழிமறித்து பணம் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவம் அதிகரித்து வந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பேளுக்குறிச்சி அடுத்த தாண்டக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பூபதி(40) என்பவர் அப்பகுதியில் டூவீலரில் சென்றபோது 2 பேர் வழிமறித்து சரமாரி தாக்கினர். இதனால், நிலை குலைந்த பூபதியிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டனர். மேலும், பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வழிப்பறியில் ஈடுபட்டதாக துத்திக்குளம் பகுதிச் சேர்ந்த பாய்(எ) தினேஷ் என்பவரை 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், காளப்பநாயக்கன்பட்டி நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார்(21) என்பவரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு சேந்தமங்கலம் அருகே வாகன சோதனையின்போது சரவணகுமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வழிப்பறி கொள்ளையன் கைது appeared first on Dinakaran.