பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம் மதுரை மீனாட்சி நகரில் டாக்டர் மணமல்லி அன்பழகன் அறக்கட்டளை சார்பில் பேராசிரியர் அரங்கம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேராசிரியர் அரங்கத்தை திறந்து வைத்தனர். இதற்கு முன்னதாக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள், பகுதி திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு, மேயர் பிரியா, மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி மற்றும் திமுக நிர்வாகிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகை தந்தபோது சாலையோராங்களில் ஏராளமான பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு முதல்வர் புறப்பட்டபோது வெளியில் கூடியிருந்த பொதுமக்கள் கை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக் கொண்டார். முதலமைச்சர் வருகையையொட்டி வளசரவாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
The post வளசரவாக்கத்தில் பேராசிரியர் அரங்கம் திறப்பு: முதல்வர், துணை முதல்வர் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.