*பொதுமக்கள் கோரிக்கை
வலங்கைமான் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகா மாரியம்மன்கோயில் பங்குனி திருவிழாவிற்கு முன்பாக பேரூராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட சேணியர் தெரு பழுதடைந்த சாலை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில்கும்பகோணம் மன்னார்குடி சாலையையும் வலங்கைமான் பாபநாசம் சாலையும் இணைக்கும் விதமாக சேணியர் தெரு வழியாக சாலை உள்ளது.
பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 600 மீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்டு மக்கள் சிரமம் இன்றி பயன்படுத்தி வந்தனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு சாலையின் மைய பரப்பில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டது.
அதன் காரணமாக சாலை முற்றிலும் பழுதடைந்து இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தார் சாலை தற்போது மண்சாலையாக காணப்படுகிறது. இதன் காரணமாக சாலைகள் கனரக வாகனங்கள் செல்லும் போது எலும்பும் புழுதிகள் வணிக நிறுவனங்கள் குடியிருப்புகள் உள்ளிட்டவை களில் படிந்து அனைத்து தரப்பினருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த இணைப்பு சாலையை பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மட்டுமல்லாது வலங்கைமான் காவல் நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்கள் கடைவீதி வழியாக செல்லாமல் இலகுவாக செல்லும் கனரக வாகனங்கள் ஆகியவை இந்த பழுதடைந்த சாலையினையே பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா போன்ற காலங்களில் கும்பகோணம் மற்றும் மன்னார்குடி மார்க்கத்திற்கு செல்லும் பேருந்துகள் இந்த சேணியர்தெரு சாலை பயன்படுத்துவர்.
பேரூராட்சி நிர்வாகம் புதிதாக சாலை அமைப்பதற்கான முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் மேலும் காலதாமதம் செய்யாமல் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி சாலையின் உயரத்தினை அதிகப்படுத்தாமல் புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வலங்கைமான் பேரூராட்சி 9வது வார்டு சேணியர் தெரு சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.