வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகம், மாவட்ட கழக துணைச் செயலாளர் துரை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அன்னக்கொடி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முனீஸ்வரன், சுந்தரபாண்டியம் பேரூர் கழக செயலாளர் சிட்டி பாபு ஆகியோர் உரையாற்றினர்.
ஒன்றிய அவைத் தலைவர் கண்ணன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுந்தரம், கணபதி, ஒன்றிய பொருளாளர் மதிவாணன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துராமலிங்கம், மாதவன், பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post வத்திராயிருப்பு ஒன்றிய திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.