எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்: அமைச்சர் தகவல்

1 day ago 3

தஞ்சாவூர்: எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்காக மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.11.82 கோடி செலவில் 16 புதிய மருத்துவ கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்து, 2025-26 நிதியாண்டில் ரூ.7.45 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள 13 கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 9.50 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏறக்குறைய 50 ஆயிரம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. இக்குழந்தைகளை கண்காணித்து, பராமரிப்பதற்காக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article