வருமுன் காப்போம் ஆவணப்படம் வெளியீடு

1 month ago 5

திண்டுக்கல், நவ. 21: திண்டுக்கல் தமிழ்நாடு மற்றும் திண்டுக்கல் மாவட்ட மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கம் சார்பில் எச்.பி.வி., தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஆவணப்பட வெளியீட்டு விழா தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. மருத்துவச் சங்க தலைவர் அமலா தேவி வரவேற்றார். டாக்டர்கள் மாதுரி பாட்டீல், ஷர்மிளா அய்யாவு, ரமணிதேவி, சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஆகியோர் விழிப்புணர்வு ஆவணப்படத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சியில், ஜிடிஎன் கல்லூரி தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை, டாக்டர் காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் சங்க செயலாளர் செல்வராணி நன்றி கூறினார்.

The post வருமுன் காப்போம் ஆவணப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article