டெல்லி: மசோதாவை மறுஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பினால் முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா? என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மசோதா மாநில அரசால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும்போது ஆளுநர் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் அதன் மீது குடியரசுத் தலைவர் எந்த மாதிரியான முடிவுகளை மேற்கொள்ளலாம்? என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாக விடைகாண வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post மசோதாவை மறுஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பினால் முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா?: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி! appeared first on Dinakaran.