சென்னை: ‘தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது’ என்று மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்று (பிப்.25) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். ஆகவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.