வருகிற 15ம் தேதி கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் எழுத்து தேர்வு

1 month ago 6

காரைக்கால்,டிச.6: கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் எழுத்து தேர்வு வரும் 15ம் தேதி நடக்கிறது. இதற்காக 19 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை சார்பு செயலர் (தேர்வு பிரிவு) ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுச்சேரி கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் 15 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் 2 தேர்வு மையங்களிலும், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் தலா 1 தேர்வு மையத்திலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் < https://recruitment.py.gov.in/ > என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, 5ம் தேதி முதல் காலை 10 மணி முதல் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் விவரம் (அ) உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வருகிற 15ம் தேதி கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் எழுத்து தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article