பேரணாம்பட்டு, ஏப்.11: பேரணாம்பட்டு காப்பு காடுகளில் வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்ட தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனத்துறையினர் சார்பில் வனப்பகுதியில் உள்ள காப்பு காடுகளில் வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் காட்டில் உள்ள விலங்குகள் தண்ணீர் தேடி அலையும் சூழல் ஏற்படுவதால், பேரணாம்பட்டு வன விரிவு காப்பு காடுகளான சாரங்கல், அரவட்லா, எருக்கம்பட்டு, குண்டலபல்லி, பத்தலபல்லி போன்ற காடுகளில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளுக்கு நேற்று பேரணாம்பட்டு வனத்துறையினர் டிராக்டர்களில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.
The post வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்ட தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி வனத்துறையினர் நடவடிக்ைக பேரணாம்பட்டு காப்பு காடுகளில் appeared first on Dinakaran.