
சென்னை,
சென்னையை அடுத்த வண்டலூரில் மாநகர பஸ்சில் ஏறிய முதிய பயணி ஒருவரை ஓட்டுநரும், நடத்துநரும் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்து, சம்பந்தப்பட்ட முதிய பயணி பஸ்சில் ஏறியதாக கூறப்படுகிறது. முதியோர் இருக்கையில் அமரக்கூடாது என நடத்துநர் கூறியதால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முடிவில் கைகலப்பாக மாறியதாக தகவல் வெளியான நிலையில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.டி.சி இயக்குநர் பிரபு சங்கர் தகவல் தெரிவித்தார்.
இந்தநிலையில், தீவிர விசாரணைக்கு பிறகு மாநகர பஸ்சில் ஏறிய முதியவரை ஓட்டுநர், நடத்துநர் தாக்கிய சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துரை பணியிடை நீக்கம் செய்து எம்.டி.சி இயக்குநர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.