தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி

10 hours ago 1

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதி விதி அன்று எண் 110 இன் கீழ் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசானது அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத (ஜனவரி – ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சம் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article