சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான சென்னை மாநகர இளைஞர் அணி சார்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட தமிழக இளைஞர்களிடம் போதை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் இன்று காலை 5.30 மணியளவில் சென்னை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரதாப்ராஜா தலைமையில் சென்னை, பெசன்ட் நகரில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் பெருமக்கள், அரசு உயர் அதிகாரிகள் சிறப்பாளர்களாக பங்கேற்று, விழிப்புணர்வு மாரத்தான் தொடங்கி வைக்கிறார்கள். சென்னை மண்டலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் கலந்துக்கொள்ள அன்போடு அனைவரையும் அழைக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞர் அணி சார்பில் இன்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: விக்கிரமராஜா அழைப்பு appeared first on Dinakaran.