மதுரை மாநகராட்சி பணியாளர்கள் குழந்தைகளை பராமரிக்க ‘டே கேர் சென்டர்’ - ஆணையர் உத்தரவு

12 hours ago 3

மதுரை: மாநகராட்சி பணியாளர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் கவலையின்றி கவனம் செலுத்த உதவும் வகையில் பகல் நேரங்களில் அவர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க மதுரை மாநகராட்சியில் முதல் முறையாக ‘டே கேர் சென்டர்’ அமைக்க ஆணையாளர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்றைய பொருளாதார தேவை மிகுந்த நவீன காலத்தில் கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்வது அவசியமாகிவிட்டது. ஆனால், அவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்லாத சிறு குழந்தைகள் இருந்தால் இருவரும் பணிக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. அந்த அடிப்படையில், மதுரை மாநகராட்சி அலுவலங்களில் பணிபுரிவோர் வீடுகளிலும் கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்லும்போது அவர்களுடைய சிறு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

Read Entire Article