கோவை: கோவை தொண்டாமுத்தூரில் வக்பு சட்டத்தை எதிர்த்து வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதியின் சார்பில், கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்குட்பட்ட உக்கடம் அன்புநகர் பகுதி முழுவதும், வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் இன்று (ஏப்.19) நடத்தப்பட்டது.