வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி

3 weeks ago 5

சென்னை: பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களில் உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ளவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்காக 87 அரசு மேல்நிலைப் பள்ளிகள் வட்டார அளவில் உயர்கல்வி வழிகாட்டி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களுக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வழங்கப்படும். இதில் பங்கேற்க ஆர்வம் உள்ள மாணவர்கள் தங்கள் விருப்பத்தை எமிஸ் தளத்தில் ஆசிரியர்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். பயிற்சிக்கு வரும் மாணவர்கள் மதிய உணவு கொண்டுவர வேண்டும். பயிற்சி வகுப்புக்கான உள்ளடக்கங்கள் இயக்குநரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். முதல் வாரம் 9 போட்டித் தேர்வுகளுக்கும், 2வது வாரம் 10 போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்கள், பயிற்சி மையங்களின் விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

The post வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article