சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு

2 hours ago 1


சென்னை: வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,966லிருந்து ரூ.1,959.50-ஆக விற்பனை ஆகிறது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.818.50க்கு விற்பனை ஆகிறது.

ஒன்றிய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகிறது.

இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் விலை கடந்த ஜனவரி மாதம் ரூ.14.50-க்கு குறைத்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து 1959.50 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சிலிண்டர் விலை குறைவு காரணமாக வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதேவேளையில் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த விலை மாற்றமும் இன்றி ரூ 818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

 

 

 

The post சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு appeared first on Dinakaran.

Read Entire Article