வடமதுரை, டிச.10: வடமதுரை அருகே பெண்ணை தாக்கியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வடமதுரை அருகே புத்தூர் ஊராட்சியில் உள்ள கரிவாடன் செட்டிபட்டி களத்து வீட்டை சேர்ந்தவர் தனலெட்சுமி (50). அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(48). இவர் தனலெட்சுமி வீட்டிற்கு செல்லும் பாதையில் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டி உள்ளார். இதனை தனலட்சுமி தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதகாவும், செல்வம் மற்றும் அவரது தம்பி சிங்கராயர் ஆகிய இருவரும் சேர்ந்து தனலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தனலெட்சுமி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், செல்வம், சிங்கரயர் ஆகிய இருவர் மீதும் வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வடமதுரை அருகே பெண் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.