திருச்சி, பிப்.25: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.28ம் தேதி நடைபெற உள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தகவல் வௌியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அதில் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் பிப்.28 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம். மேலும் விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post பிப்.28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.