திருச்சி, பிப்.25: ஆறுபது ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று பர்மா காலனி மற்றும் காவேரி நகர் மக்கள் குறைதீர் முகாமின்போது மனு அளித்தனர்.
திரு்சி மாவட்டம் திருவெறும்பூர் பர்மா காலனி மற்றும் காவேரி நகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்த பேச்சு வார்த்தையில் தற்போது குடியிருக்கும் மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் குடியிருந்து வருவதாகவும், தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ள நிலையில், இந்த இடம் ரயில்வேக்கு சொந்த என்று எப்படி சொல்ல முடியும். அதே சமயம் கடந்த 1927ல் இந்த இடம் 34 பேருக்கு சொந்தமான பட்டா இடமாக இருந்துள்ளது. அதில் 1987க்கு பிறகு இந்த இடத்தை ரயில்வே ஸ்டேசன் புறம்போக்கு இடம் என்று பதிவாகி உள்ளது.
The post 60 ஆண்டுகளாக குடியிருக்கும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் பர்மா காலனி, காவேரி நகர் மக்கள் கோரிக்கை மனு appeared first on Dinakaran.