சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஏற்கெனவே அறிவித்துள்ள மாவட்ட, நகர காங்கிரஸ் நிர்வாகிகளின் மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட கொளத்தூர், திருவிக நகர், பெரம்பூர் தொகுதிகளில் உள்ள 20 வார்டுகளின் காங்கிரஸ் கட்சி கட்டமைப்பின்படி அமைக்கப்பட்டுள்ள 35 வட்ட கமிட்டி, 9 சர்க்கிள் கமிட்டி என ஒவ்வொரு கமிட்டிக்கும் 31 நிர்வாகிகள் வீதம் மொத்தம் 1,364 நிர்வாகிகளுக்கு முறையே தலைவர், துணை தலைவர், பொது செயலாளர், பொருளாளர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பிரிவு நிர்வாகிகள் பரிந்துரைக்கப்பட்டு, முறையான கமிட்டிகள் அமைக்கப்படடன.
அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வழங்கப்பட்ட படிவங்களை, வடசென்னை மேற்கு மாவட்டத்தில் 100 சதவிகித நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டமாக நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஒப்படைக்கப்பட்டது.
இதில் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லிபாபு. மாவட்ட பொறுப்பாளர் ஜி.கே.தாஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர் விஜயன், ஜோதி, பாராளுமன்ற அமைப்பாளர் தாமோதரன், சட்டமன்ற அமைப்பாளர்கள் வில்லிவாக்கம் சுரேஷ், சுகன்யா, கிஷோர்குமார், உமாபதி, காளிஷா, ஏ.ஆனந்த், கொடுங்கையூர் செல்வம், சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் பீர்முகமது, ரஜினி செல்வம், கணபதி, முரளி, ஹரிபாபு, ஆனந்தராமன், பாபுகான், சுந்தர், பாஸ்கர், வட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் காங்கிரசின் புதிய நிர்வாக மறுசீரமைப்பு பட்டியல்: தலைவர் செல்வப்பெருந்தகையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.