“எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வந்தாலும் திமுக வாக்கு வங்கியை முந்த முடியாது” - அமைச்சர் ரகுபதி

3 hours ago 3

சென்னை: “கண்ணுக்கு தெரிந்த வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதாதான் சொன்னார். நாங்கள் எதிரிகள் இல்லை என்று சொல்லவில்லை. எதிரிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய வாக்கு வங்கி குறைந்துசென்று கொண்டுள்ளது என்றுதான் சொல்கிறோம். எதிர்கட்சிகளின் வாக்கு வங்கி அனைத்தும் சேர்ந்து வந்தாலும், எங்கள் வாக்கு வங்கியை மிஞ்ச முடியாது. அதற்கு ஏற்றால் போல் மக்கள் விரும்பும் ஆட்சியை முதல்வர் நடத்தி கொண்டு இருக்கிறார்,” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (பிப்.13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியவது: “தமிழக முதல்வரின் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் எல்லா குடும்பங்களையும் சென்றடைந்து இருக்கின்றது. பலன் அடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இன்றைய ஆட்சி நடைபெறுகிறது. இதனை அண்மையில் வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பும் உணர்த்துகின்றது.

Read Entire Article