வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - சு.வெங்கடேசன் எம். பி.

3 months ago 19

சென்னை,

வளிமண்டல கீழடுத்து சுழற்சி காரணமாக நேற்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் நேற்று கன மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் போன்று தண்ணீர் புரண்டு ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் போக முடியவில்லை.

இந்த நிலையில், மதுரையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம். பி. தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

கடந்த 24 மணிநேரத்தில் மதுரையில் 16 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. நேற்று பெய்த பெருமழையை கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்

Read Entire Article