பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி... ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஆர்.சி.பி

2 weeks ago 6

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிம் டேவிட்-க்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் ஆர்.சி.பி. அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, ஐ.பி.எல். தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது.

இதற்கு முன்னர் இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லியை (45 தோல்வி, டெல்லி மைதானம்) பின்னுக்கு தள்ளி பெங்களூரு (46 தோல்வி, பெங்களூரு) அணி முதல் இடத்திற்கு முன்னேறியது.

ஒரு மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள்:

ஆர்.சி.பி - 46 தோல்விகள் (பெங்களூரு)

டெல்லி கேப்பிடல்ஸ் - 45 தோல்விகள் (டெல்லி)

கே.கே.ஆர் - 38 தோல்விகள் (கொல்கத்தா)

மும்பை இந்தியன்ஸ் - 34 தோல்விகள் (மும்பை வான்கடே)

பஞ்சாப் கிங்ஸ் - 30 தோல்விகள் (மொஹாலி)

Read Entire Article