வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி பகுதி முழுவதும் 48,664 மரக்கிளைகள் அகற்றம்

3 weeks ago 3

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருந்த 48,664 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள சாலையோர மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில், மழைக்காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஜூன் 1ம்தேதி முதல் கடந்த 14ம்தேதி வரை 45,956 மரங்களின் கிளைகளும், கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 2,708 மரங்களின் கிளைகளும் என மொத்தம் 48,664 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக 262 மர அறுவை இயந்திரங்கள், 216 டெலோஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள், வட்டாரத்திற்கு தலா 3 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் என 9 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் மற்றும் 2 ஹைட்ராலிக் ஏணிகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி பகுதி முழுவதும் 48,664 மரக்கிளைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article