சென்னை: வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா என்பது சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல்;2014 முதல் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது; சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் விளக்கு என பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு appeared first on Dinakaran.