வசூலில் அசத்தும் 'கிஷ்கிந்தா காண்டம்' திரைப்படம்

2 months ago 22

மலையாள சினிமா இந்தாண்டிலும் நல்ல திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில படங்களைத் தவிர்த்து பெரும்பாலும் கதையம்சமுள்ள படங்களே திரைக்கு வந்துள்ளன. ஓணம் வெளியீடாக டோவினோ தாமஸின் ஏ.ஆர்.எம் மற்றும் ஆசிப் அலியின் கிஷ்கிந்தா காண்டம் திரைப்படங்கள் வெளியாகின.இதில், ஏ.ஆர்.எம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக வெற்றியை அடைந்துள்ளது.

தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் உருவான கிஷ்கிந்தா காண்டம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் முற்றிலும் எதிர்பார்க்காத மன மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.

ரூ. 7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன்படி ஹீரோவின் தந்தை முன்னாள் இராணுவ வீரராக இருப்பதால் அவரும் ஒப்படைப்பதற்காக துப்பாக்கியை தேடுகின்றனர். ஆனால் துப்பாக்கி காணாமல் போகவே இதற்காக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இப்படத்தில் ஆசிப் அலியின் மனைவியாக வரும் அபர்ணா பாலமுரளியை விசாரிக்க தொடங்குகின்றனர். இந்த விசாரணையின்போது அடுத்தடுத்த சில மர்மங்கள் வெளிவரத் தொடங்குகிறது. இந்த பாணியில் கதைக்களம் அமைந்துள்ளது.

Read Entire Article