
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து வங்காளதேச அணி வரும் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அதன்பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இத்தொடர்களுக்கான வங்காளதேச டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடர்களுக்கான வங்காள்தேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷாண்டோ அந்த பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது வங்காளதேச டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026 டி20 உலகக்கோப்பை வங்காளதேச டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.ஏ.இ மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்காளதேச அணி விவரம்:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், சவுமியா சர்கார், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், மெஹதி ஹசன் (துணை கேப்டன்), தன்விர் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தன்சிம் ஹசன் சகிப், நஹித் ராணா, ஷோரிபுல் இஸ்லாம்.